Trump vs Putin | முதலும் கடைசியுமான முயற்சி - டிரம்ப் vs புதின்.. கிளைமேக்ஸின் விளிம்பில்..
டிரம்ப் விதித்த கெடு - புதினை சந்திக்கவுள்ள அமெரிக்க தூதர்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த வாரம் அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காப்பை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டின் அரசு மாளிகையான கிரெம்ளின் கூறியுள்ளது. இது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்படும் கடைசி முயற்சியாக பார்க்கப்படுகிறது. முன்னதாக உக்ரைனில் வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புக் கொள்ளாவிட்டால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை ரஷ்யாவுக்குப் பயணம் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
