Trump vs Putin | டிரம்பை பங்கம் செய்த ரஷ்யா - இது நெத்தியடி இல்ல.. சவுக்கடி

x

"வரி விதிப்பதால் வரலாற்றின் போக்கை தடுத்து விட முடியாது"- ரஷ்யா

வரி விதிப்பதாலும், பொருளாதாரத் தடை விதிப்பதாலும் வரலாற்றின் போக்கை தடுத்து விட முடியாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா சகரோவா, செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து கேள்வி எழுப்ப பட்டது. அதற்கு தடைகளும் கட்டுப்பாடுகளும் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று தெரிவித்தார். தங்கள் ஆதிக்கம் குறைந்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தங்கள் புதிய காலனிய சிந்தனையை பிற நாடுகள் மீது திணித்து, அரசியல் ரீதியாக பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா தொடர்ந்து அளித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்