Trump | USA | தலைக்கு 1 கோடி டாலர் விலை வைக்கப்பட்ட அதே நபர் - இன்று டிரம்பின் தோஸ்து

x

சிரியா அதிபர் - அன்று தேடப்படும் நபர், இன்று டிரம்ப்பின் நண்பர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திப்பதற்காக அந்நாட்டிற்குச் சென்றுள்ள சிரிய அதிபர் அல்-ஷாரா, அமெரிக்க ராணுவ வீரர்களுடன் கூடைபந்து விளையாடினார். முன்னாள் அல் கொய்தா தலைவரான அல்-ஷாராவின் தலைக்கு ஒரு காலத்தில் அமெரிக்க அரசு 1 கோடி டாலர் சன்மானம் அறிவித்திருந்தது. சிரியாவில் கடந்த டிசம்பரில் பஷார் அல்-அசாத்திடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய அல்-ஷாரா, உலக நாடுகளுடனான உறவுகளை மீண்டும் புதுப்பிக்க முயற்சித்து வருகிறார். கடந்த மே மாதம், சவுதி அரேபியாவில் அல்-ஷாரா, டிரம்ப்பை சந்தித்து பேசிய பிறகு, சிரியா மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை டிரம்ப் ரத்து செய்தார். அதன் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்