Trump | US | ``பாருங்க.. ஒரு வாரம் ஆனாலும் முடிக்க முடியாது’’ - மேடையிலேயே தூக்கி அடித்த டிரம்ப்
தன் சாதனைகளை கூறி அலட்சியமாக கோப்புகளை வீசியெறிந்த ட்ரம்ப்...அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, அந்த கோப்புகளை அலட்சியமாக தூக்கி வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், 2வது முறையாக அதிபராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது நிர்வாகத்தின் சாதனைகளை பட்டியலிட்டார். 365 சாதனைகள் அடங்கிய நீண்ட அறிக்கையை வெளியிட்டு, நவீன வரலாற்றில் எந்த அரசையும் விட முதல் ஆண்டிலேயே அதிக சாதனைகள் செய்துள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்தார்...
இந்த ஆவணத்தை ஒரு வாரம் முழுவதும் வாசித்தாலும் முடிக்க முடியாது என்று அவர் கூறியதோடு, போர்களை முடிவுக்கு கொண்டு வந்ததும், அமெரிக்க இராணுவ வலிமையை மீண்டும் கட்டியெழுப்பியதுமே தனது ஆட்சியின் முக்கிய வெற்றிகள் எனவும் கூறி, அந்த கோப்புகளை தூக்கி எறிந்தார்.
