Trump | ஒரு கொலையால் வெறிபிடித்தது போல் சுற்றும் டிரம்ப் - மொத்தமாக இறுக்க உத்தரவு
19 நாடுகளின் கிரீன் கார்டுகள் ஆய்வு - டிரம்ப் உத்தரவு
அமெரிக்காவில் தேசிய காவல் படைவீரர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதைத் தொடர்ந்து, 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் கிரீன் கார்டுகளை மறுஆய்வு செய்ய அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை ஆப்கானிஸ்தானை சேர்ந்த 29 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் காவலர் உயிரிழந்தார்.
இந்தப் பிரச்னையைத் தீவிரமாக கருதிய டிரம்ப், கிரீன் கார்டு விதிகளைக் கடுமையாக்கும் வகையில்,
ஆப்கானிஸ்தான், பர்மா, ஏமன், சோமாலியா உள்ளிட்ட 19 நாடுகளை சேர்ந்தவர்களின் கிரீன் கார்டுகளை மறுஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் முந்தைய ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் விடுவிக்கப்பட்ட கிரீன் கார்டுகள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினர் கிரீன் கார்டு பெறும்பட்சத்தில், அந்நாட்டில் நிரந்தரமாக குடியேறும் உரிமையைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.
