Trump | UFO | `பறக்கும் தட்டு’ ரகசியங்களை உலகுக்கே வெளியிடும் டிரம்ப்
`பறக்கும் தட்டு’ ரகசியங்களை உலகுக்கே வெளியிடும் டிரம்ப்
Trump | UFO | `பறக்கும் தட்டு’ ரகசியங்களை உலகுக்கே வெளியிடும் டிரம்ப் #trump #UFO #thanthitv பறக்கும் தட்டுகள் குறித்த ரகசிய ஆவணங்கள் விரைவில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். நிலவைச் சுற்றி வந்து சாதனை படைத்த ஆர்டெமிஸ்-2 விண்வெளி வீரர்களை வெள்ளை மாளிகையில் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார். ஏற்கனவே நிலுவையில் உள்ள பறக்கும் தட்டுகள் குறித்த ஆவணங்களின் முதல் தொகுப்பு விரைவில் வெளியாகும் என்றும், தனது பதவிக்காலத்திலேயே மனிதர்கள் மீண்டும் நிலவில் தரையிறங்க வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
