Trump | டிரம்ப் காதுக்கு தேன் போல பாய்ந்த சேதி
டிரம்ப் காதுக்கு தேன் போல பாய்ந்த சேதி
இஸ்ரேல், காசா போர் நிறுத்ததுக்கு வழிவகை செய்யும் அமைதி வாரியத்தில் தாங்கள் இணையவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அதிபர் டிரம்பையும், அமைச்சர் மார்கோ ரூபியோவையும் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து இந்த அறிவிப்பை எக்ஸ் பக்கத்தில் நெதன்யாகு வெளியிட்டார். காசா போர் நிறுத்ததை முன்னிறுத்தி டிரம்ப் முன்மொழிந்த அமைதி வாரியத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது
