

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியின் போது உருவான கலவரத்தில், ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள், பேரணி நடத்தி வருகிறார்கள். இதன்படி, வாஷிங்டனில் நடைபெற்ற பேரணி, எதிரணியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் திடீரென கலவரமாக மாறியது. இதில் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கலவரத்தில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்படவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.