Trump vs Mark Carney | பகிரங்கமாக மிரட்டிய டிரம்ப்.. சைலண்ட் ஆயுதத்தை வெளியே எடுத்த கனடா

x

டிரம்ப் மிரட்டலுக்கு கனடா பிரதமர் பதில்

அமெரிக்க அதிபர் டிரம்ப் 100 சதவீத சுங்கவரி மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, கனடா பொருளாதாரம் வெளிநாட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி கவலை தெரிவித்துள்ளார்...

மற்ற நாடுகள் என்ன செய்கின்றன என்பதை நாம் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்த கார்னி...

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார்...

முன்னதாக கனடா - சீனா வர்த்தக உறவுகளை கடுமையாக விமர்சித்த டிரம்ப், கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், அமெரிக்கா கனடாவைச் சேர்ந்த பொருட்களுக்கு 100 சதவீதம் சுங்கவரி விதிக்கும் என மிரட்டினார்.

மேலும், பிரதமர் கார்னியை “ஆளுநர்“ என குறிப்பிட்டு டிரம்ப் விமர்சனம் செய்தார்.

ஏற்கனவே கனடாவை அமெரிக்காவின் மாகாணமாக இணைக்க போவதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், கார்னியை அவர் ஆளுநர் என அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்