Trump | PM Modi | போன் அடித்த உலக தலைவர்.. மோடியுடன் சேர்ந்து மாஸ்டர் பிளான் - டிரம்புக்கு ஆப்பு
Trump | PM Modi | Brazil President | போன் அடித்த உலக தலைவர்.. மோடியுடன் சேர்ந்து மாஸ்டர் பிளான் - டிரம்புக்கு காத்திருக்கும் ஆப்பு
பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் தொலைபேசியில் ஆலோசனை
பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரேசில் அதிபர் லுலா டா சில்வா ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரி விதித்து வருகிறார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், பிரேசிலிய பொருட்களுக்கும் 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இந்நிலையில் இருநாட்டு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தி உள்ளனர். இது தொடர்பாக பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, பிரேசில் தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பு உட்பட அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும். அதிபர் டொனால்டு டிரம்பை அழைக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். இதேபோல், தெற்கு நாடுகளுக்கு இடையே மக்களை மையமாகக்
கொண்ட கூட்டணி அனைவருக்கும் பயனளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், வர்த்தகம், சக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரத்தில் மூலோபாய கூட்டணியை வலுப்படுத்த உறுதி ஏற்றுள்ளோம் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
