Trump News | Israel Gaza War | ஹமாஸ்க்கு எதிரான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம் - இஸ்ரேல் அறிவிப்பு
காஸாவில் நடக்கும் ஹமாஸுக்கு எதிரான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.ஹமாஸும் தாக்குதலை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டால், பிணைக்கைதிகளின் விடிவுப்பு துவங்கப்படும் என்றும், இதன்மூலம் 3 ஆயிரம் ஆண்டு பேரழிவு முடிவுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.நீண்ட காலமாக நடக்கும் காஸா போரில் இதுவரை சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியுள்ள நிலையில், காஸா மீது தாக்குதலை நிறுத்த, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹமாஸுக்கு கெடு விதித்திருந்தார். இதற்கு பணிந்த ஹமாஸ் தாக்குதலை நிறுத்தி, பிணைகைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்ட நிலையில், தாக்குதலின் அடுத்த கட்ட திரும்ப பெறுதலுக்கான கட்டுப்பாடுகள், பின்னர் அறிவிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.தனது பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் எடுத்த முடிவுக்கு, தனது பாராட்டுக்களையும் அவர் தெரிவித்துள்ளார்
