Trump | Modi | Putin |``மோடி வாக்கு கொடுத்துட்டாரு’’ - டிரம்ப் தூக்கி போட்ட குண்டு..புதினுக்கு ஷாக்?

x

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கமாட்டேன் என பிரதமர் மோடி தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த‌போது, பிரதமர் மோடியுடன் அமெரிக்க தூதர் செர்ஜியோ சந்தித்த‌து குறித்து கேள்வி எழுப்ப‌ப்பட்டது. அதற்கு, செர்ஜியோ பெரிய வேலை செய்யப்போகிறார் என்றார்.இந்தியா சிறந்த நாடு என்றும், பல ஆண்டுகளாக இந்தியாவை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். மோடி சிறந்த மனிதர் என்றும், மோடி இந்தியாவில் நீண்ட காலமாக ஆட்சி புரிகிறார் என்றும் தெரிவித்த டிரம்ப், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கப்போவதில்லை என தன்னிடம் மோடி உறுதி அளித்துள்ளார் என்றும் கூறினார்.ஆனால் மோடியால் உடனே அதனை நிறைவேற்ற முடியாது என்றும், சிறிது காலம் ஆகும், அது சீக்கிரமே நடக்கும் என்றும் தெரிவித்தார். ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், உக்ரைன் போரை நிறுத்துவது மேலும் எளிதாகும் என்றார். இதேபோன்று, சீனாவையும், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்