Trump | வெறி பிடித்து டிரம்ப் அதிர்ச்சி அறிவிப்பு.. கிடுகிடுத்த உலக நாடுகள்
``வரி விதிக்க அதிகாரம் இல்லை’’ என US உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - வெறி பிடித்து டிரம்ப் அதிர்ச்சி அறிவிப்பு.. கிடுகிடுத்த உலக நாடுகள் #trump #ussupremecourt அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கும் அதிபர் டிரம்ப்புக்கும் இடையே அதிகார மோதல் சர்வதேச நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அனைத்து நாடுகளுக்கும் கூடுதலாக 10 சதவீதம் இறக்குமதி வரிவிதிப்பதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை பயன்படுத்தி, இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட 100-க்கும் அதிகமான நாடுகளுக்கு டிரம்ப் கடுமையான வரிகளை விதித்தார். இதனை எதிர்த்து பல்வேறு மாகாண அரசுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் 3 கீழமை நீதிமன்றங்கள் டிரம்பின் வரிவிதிப்பு செல்லாது என தீர்ப்பளித்தன. இதையடுத்து இந்த வழக்கு அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் கூட்டளி நாடுகள் மீது டிரம்ப் வரிவிதித்தது சட்டவிரோதம் என்று நேற்றைய தினம் நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்தனர். அவசர பொருளாதார சட்டத்தை பயன்படுத்த டிரம்புக்கு அதிகாரம் இல்லை, அவர் விதித்த வரிகள் செல்லாது என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். இந்தநிலையில், வாஷிங்டன் டி.சி-யில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வரிவிதிப்புக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளை கடுமையாக சாடினார். அந்நிய சக்திகளின் கைப்பாவையாக செயல்படும் நீதிபதிகளுக்கு, நாட்டின் வளர்ச்சியின் மேல் அக்கறை இல்லை என்று அவர் காட்டமாக விமர்சித்தார். மேலும், தாம் விதித்த வரிகள் அனைத்தும் செயல்பாட்டில் இருக்கும் என்றும், அனைத்து நாடுகளுக்கும் கூடுதலாக 10 சதவீதம் இறக்குமதி வரிவிதிப்பதாகவும் அதிபர் டிரம்ப் தடாலடியாக அறிவித்தார். கூடுதல் வரிவிதிப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், அடுத்த 150 நாட்களுக்கு இந்த வரிவிதிப்பு செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
