மிரட்டல் விடுத்த டிரம்ப் - இந்தியாவோடு கைகோர்த்து தரமான பதிலடி கொடுத்த சீனா

x

பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்காவிற்கு எதிரான கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகள் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பு எந்த ஒரு நாட்டிற்கும் எதிரானது அல்ல என சீனா பதில் அளித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், கூடுதல் வரிவிதிப்பு குறித்த டிரம்பின் மிரட்டலுக்கு பதிலளித்துள்ளார். அதில் வர்த்தக போர் மற்றும் வரிவிதிப்பு போரில் யாராலும் வெற்றியாளராக முடியாது என்ற தனது நிலைப்பாட்டை பலமுறை சீனா கூறி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்