கொரோனா உறுதியானதற்கு முதல் நாள் டிரம்ப் பங்கேற்ற கூட்டம் - டிரம்ப் தூக்கி எறிந்த தொப்பியை பிடித்த ஆதரவாளர்

அமெரிக்க அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், அவர் உற்சாகமாக உள்ளதாக வெள்ளை மாளிகை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா உறுதியானதற்கு முதல் நாள் டிரம்ப் பங்கேற்ற கூட்டம் - டிரம்ப் தூக்கி எறிந்த தொப்பியை பிடித்த ஆதரவாளர்
Published on

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்புக்கு லேசான கொரோனா தொற்று அறிகுறிகள் கண்டு அறியப்பட்டு உள்ளதாக வெள்ளை மாளிகை பணியாளர்கள் தலைவர் மார்க் மேடோஸ் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் மிகுந்த திடக்காத்திரமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையிலும், இருவரும் உற்சாகமாக இருப்பதாக மார்க் மேடோஸ் தெரிவித்து உள்ளார். அதிபர் தமது உடல்நலம் மீது மட்டும் அக்கறைக் கொள்ளவில்லை என்றும், ஒட்டுமொத்த அமெரிக்கர்கள் நலனிலும் அக்கறை உடன் இருப்பதாக மார்க் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், மேரிலாண்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்தபடியே சில நாட்கள் அரசு பணிகளை டிரம்ப் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபருக்கு கொரோனா தொற்ற ஏற்பட்டுள்ளதால், இதுவரை மாஸ்க் அணியாமல் இருந்த அவரது உதவியாளர்கள் தற்போது முக கவசம் அணிந்தபடியே வலம் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பால் டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியானதற்கு முதல்நாள் டிரம்ப் மின்னசோட்டா மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். முக கவசம் அணியாமல் நுழைந்த டிரம்ப், அங்கிருந்த ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த வண்ணம் வந்தார். அப்போது பேஸ்பால் தொப்பிகளை ஆதரவாளர்களை நோக்கி வீசினார். அவற்றில் ஒன்றை ஒரு ஆதரவாளர் லாவகமாக பிடித்தார். தற்போது டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், அந்த தொப்பியை கேட்ச் பிடித்த ஆதரவாளர் உள்பட அந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கொரோனா பீதியில் உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com