``சீனாவை அழிக்க டிரம்பிடம் துருப்பு சீட்டு’’ - விடிந்தால் இந்தியாவுக்கும் அதிர்ச்சி

x

இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு

இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததால், இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்த நிலையில், மேலும் 25 சதவீதம் வரி விதிப்பதாக அதிரடியாக தெரிவித்த டிரம்ப், ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் கூடுதல் வரி அமலுக்கு வரும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், கூடுதல் வரி விதிப்பிற்கான நடைமுறையை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், கால அவகாசம் முடிந்ததும், அமெரிக்காவுக்குள் வரும் இந்திய பொருட்களுக்கும்,

குடோனில் இருந்து வெளியே எடுக்கப்படும் பொருட்களுக்கும் இந்த புதிய வரி விதிப்பு முறை பொருந்தும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவுடன் வர்த்தக உறவை மேற்கொள்ளும் நாடுகள் மீது கூடுதலாக வரி விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்