டிரம்பின் உத்தரவுக்கு விழுந்த அடி - இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு

x

அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்து அந்நாட்டு அதிபா் டிரம்ப்பின் கையெழுத்திட்ட உத்தரவை அமல்படுத்துவதற்கு அமெரிக்க நீதிபதி தற்காலிகமாக தடை விதித்துள்ளார். பிப்ரவரி 19ம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரவிருந்த நிலையில், இது அப்பட்டமான அரசியலமைப்பிற்கு எதிரானது என அமெரிக்க மாவட்ட நீதிபதி John Coughenour கருத்து தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக ஜனநாயகக் கட்சி தலைமையிலான நான்கு மாகாணங்கள் தொடர்ந்த வழக்கு சியாட்டிலில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. டிரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக மேலும் 18 மாகாணங்கள் தொடர்ந்த வழக்கு தனியாக விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்