Trump | Gaza vs Israel | உலகை உலுக்கிய `கடைசி உடல்’ - நிம்மதி பெருமூச்சு விட்ட டிரம்ப்
காசாவில் 840 நாட்களுக்கும் மேலாக பிணையாக இருந்த காவல்துறை அதிகாரி ரான் கிவிலியின் உடல் மீட்கப்பட்டதை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அனைத்து இஸ்ரேலியர்களையும் மீட்ட பெருமை தனது நிர்வாகத்தையே சாரும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ஊடக பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சாத்தியமற்ற செயல் என பலர் கருதியதை சாத்தியப்படுத்திய தனது குழுவினருக்கு பாராட்டு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் வாக்குறுதிப்படி காசாவின் முக்கிய நுழைவாயிலான ராஃபா எல்லைப் பகுதியை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
Next Story
