Trump | Epstein | டிரம்ப் மற்றும் எப்ஸ்டீனை கிண்டலடித்து 'டைட்டானிக்' படத்தின் அந்த சீன் போல சிலை
Trump | Epstein | டிரம்ப் மற்றும் எப்ஸ்டீனை கிண்டலடித்து 'டைட்டானிக்' படத்தின் அந்த சீன் போல சிலை
டைட்டானிக்" காட்சி வடிவில் டிரம்ப் - எப்ஸ்டீன் நையாண்டி சிலை அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் மற்றும் ஜெப்ரி எப்ஸ்டீன் இருவரையும் சித்தரித்து நிறுவப்பட்டுள்ள நையாண்டி சிலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, 'டைட்டானிக்' படத்தின் காட்சியைப் பிரதிபலிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. 'தி சீக்ரெட் ஹேண்ட்ஷேக்' என்ற கலைக் குழுவினர், டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் இடையேயான பழைய உறவை விமர்சிக்கும் வகையில், உலகின் ராஜா என்று இந்த சிலைக்கு பெயர் சூட்டி உள்ளனர். வருகிற13-ம் தேதி வரை மட்டுமே காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள இந்தச் சிலையை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுரசித்து வருகின்றனர்.
