பழைய ஃபைல்களை தூசி தட்டும் டிரம்ப் - இந்தியர்களுக்கு புது தலைவலி ஆரம்பம்

x

5.5 கோடி அமெரிக்க விசாக்கள் மறுபரிசீலனை - இந்தியர்களுக்கு சிக்கலா?

அமெரிக்காவில் வசிக்கும் ஐந்தரை கோடி

வெளிநாட்டினரின் விசாக்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என, டிரம்ப் அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், அங்கு சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஐந்தரை கோடி வெளிநாட்டினரின் விசாக்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்தது.

அதன்படி, சுற்றுலா, மாணவர்கள், தொழில்முறை பயணம் உள்ளிட்ட விசாக்களை வைத்திருப்பவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு,

அடிப்படைத் தகுதிகள், விசா காலம், குற்றச்செயல்கள் போன்றவை குறித்து பரிசீலிக்க அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்த சோதனையின்போது விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர்களில் இந்தியர்கள் லட்சக்கணக்கில் உள்ள நிலையில், விதியை மீறியவர்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், இந்தியர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றே சொல்லப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்