Trump | ``பேராபத்து காத்திருக்கு’’ - பிரிட்டனையும் குறிவைத்த டிரம்ப்
சீனாவுடன் வர்த்தகம் செய்வது பிரிட்டனுக்கு பேராபத்து என டிரம்ப் எச்சரிக்கை
சீனாவுடன் வர்த்தகத் தொடர்பை மேற்கொள்வது பிரிட்டனுக்கு பேராபத்தாக முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.வாஷிங்டனில் மெலானியா ஆவணப்பட பிரீமியர் ஷோ-வை பார்த்த அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது இந்தத் தகவலை தெரிவித்தார். மேலும், சீனாவுடன் வர்த்தகம் செய்யும் கனடாவுக்கும் மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாக டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அமெரிக்காவுடன் விரோத போக்கை கடைப்பிடிக்கும் நாடுகளுடன் வர்த்தகம் செய்பவர்களுக்கு கூடுதல் வரியை டிரம்ப் விதித்து வருகிறார். அந்த வகையில், பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் மீதும் வரும் நாள்களில் டிரம்ப் கூடுதல் வரியை விதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
