அடுத்த இடியை இறக்கிய டிரம்ப் - ``விளைவுகள் மோசமாக இருக்க போகுது’’

x

மீண்டும் ரஷ்யாவை மிரட்டிய டிரம்ப்

தன்னுடனான சந்திப்பின்போது போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக்கொள்ளாவிட்டால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், தாம் அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா உக்ரைன் போரே நடந்திருக்காது என்றும் இதற்கு காரணம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் என்றும் மீண்டும் கூறியுள்ள நிலையில்,

கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ஆறு போர்களை தாம் நிறுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை ரஷ்ய அதிபர் புதினுடன் அலாஸ்காவில் நடைபெறும் பேச்சுவார்த்தை நன்றாக சென்றால்...

உடனே ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான இரண்டாவது சந்திப்பு நடைபெறும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தாம் விரும்பும் பதில் வரவில்லை என்றால் இரண்டாவது சந்திப்பு நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ள டிரம்ப்,

தன்னுடனான சந்திப்பின்போது போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக்கொள்ளாவிட்டால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்