டிரம்ப்பால் இந்தியாவுக்கு வரலாறு காணா பலத்த அடி

x

இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத சரிவை சந்தித்த நிலையில், 19 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 3 ஆயிரம் புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, சுமார் 1,000 புள்ளிகளும் குறைந்துள்ளன. அமெரிக்காவின் வரி விதிப்புகள் காரணமாக ஆசியா உட்பட சர்வதேச சந்தையில் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ள நிலையில், அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. இதனால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்