Trump | Cole Allen | டிரம்ப்புக்கு மரண பயம் காட்டியவர் கடிதம் வெளியானது - அமெரிக்காவே அரண்டது

Trump | Cole Allen | டிரம்ப்புக்கு மரண பயம் காட்டியவர் கடிதம் வெளியானது - அமெரிக்காவே அரண்டது
Summary

டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் கடிதம் வெளியானது வாஷிங்டன்னில் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய கோல் ஆலன், துப்பாக்கி சூட்டிற்கு முன் தனது குடும்பத்தினருக்கு அனுப்பிய கடிதத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன... அதில் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு குறைபாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்...."நான் ஒரு ஈரானிய ஏஜென்ட்டாக இருந்திருந்தால், ஒரு பெரிய இயந்திரத் துப்பாக்கியையே வெள்ளை மாளிகையின் உள்ளே கொண்டு வந்திருப்பேன், ஆனால் ஒருவரும் என்னைக் கவனித்திருக்க மாட்டார்கள்" என்றும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.... மேலும், டிரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் பெயர்களைப் பட்டியலிட்டு அவர்களைத் தான் குறிவைத்ததாகவும், அதிபர் டிரம்பை ஒரு துரோகி என்று குறிப்பிட்டதுடன் அவருக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிக்கத் தான் தயார் என்றும் அவர் எழுதியுள்ளார்....மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான கருத்துகளையும் அந்த அறிக்கையில் அவர் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது....

X

Thanthi TV
www.thanthitv.com