Putin | Trump | Iran | டிரம்ப் தாக்குதல் எதிரொலி.. புதின் என்ட்ரி.. போரில் உச்சகட்ட திருப்பம்

x

"ஈரானுக்கு துணை நிற்கும் ரஷ்யா, சீனா? - ரஷ்யாவை அணுகும் ஈரான்"

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இன்று (ஜூன் 23)மாஸ்கோவில் வைத்து சந்திக்க உள்ளதாக ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஷி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக ரஷ்யா உள்ளதை சுட்டிக்காட்டிய அவர்,

தொடர்ந்து நாங்கள் ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார். மேலும், போர் நிறுத்தத்திற்காக பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானத்தை அறிமுகப்படுத்த சீனாவுடன் இணைந்து ரஷ்யா முயற்சித்து வந்ததாகவும், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, அதை எவ்வாறு தொடர வேண்டும் என்பது குறித்து தாம் ரஷ்யா மற்றும் சீனாவுடன் விவாதிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்