மேயர் கைது.. போராட்டத்தில் குதித்த மக்கள்.. துருக்கியில் பரபரப்பு
துருக்கியில் இஸ்தான்புல் மேயர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேயர் கைதைத் தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது செய்யப்பட்டதற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய போராட்டத்தை பொதுமக்கள் முன்னெடுத்துள்ளனர். நீதி அமைதியானால், பொதுமக்கள் பேசத்தொடங்குவார்கள் என்று முழக்கங்களை எழுப்பி, மேயரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
Next Story
