

நாட்டின் பாதுகாப்பு, ஒருங்கிணைந்து செயல்படுதல், வளர்ச்சி ஆகியவை குறித்த கொழும்புவில் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னே மற்றும் மாலத்தீவு பாதுகாப்புத் துறை அமைச்சர் மரியா திதி ஆகியோர் பங்கேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். நட்புறவு முறையில் பேசிய இந்திய மற்றும் இலங்கை தரப்பில், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை, புலனாய்வு தகவல் பகிர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான வழிகள் ஆகியவை குறித்து தீவிரமாக பேசப்பட்டன. அண்மையில், எம்டி நியூ டைமண்ட் எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிந்த விவகாரத்தில், இந்தியா வழங்கிய உதவிக்கு, இலங்கை நன்றி தெரிவித்தது. பின்னர், இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சவை சந்தித்த அஜித் தோவல் முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.