ஸ்பெயினில் களைகட்டிய பாரம்பரிய காளை ஓட்டம்
பாம்ப்லோனா PAMPLONA நகரில், சான் ஃபெர்மின் San Fermin திருவிழாவின் ஒரு பகுதியாக காளை ஓட்டம் நடைபெற்றது. தெருக்களில் காளைகளை ஓடவிட்டு,
பலர் அந்த காளைகளுக்கு முன்னால் ஓடுவது, இந்த நிகழ்வின் சிறப்பம்சமாகும். இது ஒரு ஆபத்தான நிகழ்வாக இருந்தாலும், அந்நாட்டில் உற்சாகமான அனுபவமாக கருதப்படுகிறது.
இவ்விழாவின் 3ம் நாள் நிகழ்வில், காளைகள் சீறிப்பாய்ந்து ஓடிய நிலையில், 25 வயது இளைஞர் ஒருவர், காளையின் கொம்பு குத்தியதில் படுகாயமடைந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும்,
மேலும் 3 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

