அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட முயன்ற வியாபாரிகள் - திருச்செந்தூரில் சலசலப்பு

x

திருச்செந்தூரில் அமைச்சர் கே.என்.நேருவை வியாபாரிகள் முற்றுகையிட முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது. பேரூராட்சியாக இருந்த திருச்செந்தூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பதால், அதிக அளவில் வரி வசூலிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திருச்செந்தூரில் அமைச்சர் கே.என்.நேருவை ஏராளமான வியாபாரிகள் சந்திக்க முயன்றனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தகவலறிந்த அமைச்சர் கே.என்.நேரு வியாபாரிகளை சந்தித்துப் பேசி, வரி விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்