முழு சந்திர கிரகணம் - உலக புகழ் பெற்ற கோயில் நடை மூடல்
இன்று நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நடை பிற்பகல் சத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று இரவு நடைபெற உள்ளதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயில் நடை, பிற்பகல் 1 மணிக்கு அடைக்கப்பட்டு, மாலை தரிசனம் ரத்து செய்யப்பட்டு, நாளை காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
