தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறான வழியில் பயணிப்பதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விமர்சித்துள்ளார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாட்டில் பேசிய அவர், ஒரு சில தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப, தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ, அல்லது வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கோ தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை என்றும் விக்னேஸ்வரன் குற்றம்சாட்டினார்.