டிக்டாக் பிரபலம் கேபி லேம் அமெரிக்காவில் அதிரடி கைது

x

அமெரிக்காவில் விசா காலம் முடிவடைந்து தங்கியிருந்ததாக டிக் டாக் பிரபலம் கேபி லேம் Khaby Lame கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அதிகாரிகள் கண்டறிந்து சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்த வகையில், டிக் டாக் பிரபலம் கேபி லேம், விசா காலத்தை தாண்டி லாஸ் வேகாசில் தங்கியிருந்ததாக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டை சேர்ந்த கேபி லேம், அமெரிக்காவைவிட்டு வெளியேறுவதாக கூறியதைத் தொடர்ந்து அதிகாரிகள் விடுவித்தனர். இத்தாலி நாட்டில் குடியுரிமை பெற்ற கேபி லேமை டிக்டாக்கில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்