179 கிலோவால் இலங்கையில் 3 பேருக்கு தூக்கு தண்டனை
இலங்கையில் ஹெராயின் விற்பனையில் ஈடுபட்ட 3 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, 179 கிலோ ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 5 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
