வல்லரசான அமெரிக்காவிலே இதான் நிலைமை - தீயாய் பரவும் வீடியோ
வடக்கு கரோலினாவில் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடக்கு கரோலினாவில், வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. ஹைபாயிண்ட் High Point பகுதியில், சாலையில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதை ஒருவர் படம்பிடித்துள்ளார். வெள்ள பாதிப்புகளிலிருந்து 20க்கும் மேற்பட்டவர்களை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இதேபோல், மசாசுசெட்ஸ் MASSACHUSETTS மாகாணத்திலும் இடைவிடாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
Next Story
