நகமும் சதையுமாக இருந்த டிரம்ப், மஸ்க் நட்பு உடைய காரணம் இதுதான்

x

நகமும் சதையுமாக இருந்த டிரம்ப், மஸ்க் நட்பு உடைய காரணம் இதுதான்? "அதிபரையே மாற்றனும்" - மோதலால் அதிரும் அமெரிக்கா

ஒரு நாட்டோட அதிபருக்கும் அதே நாட்ட சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபருக்கும் சண்டை வருதுன்னு வைங்க, அதோட தாக்கங்கள் எப்படி இருக்கும்? இந்த கேள்வி இப்ப எழரதுக்கு காரணம் இல்லாம இல்ல. உலக அளவுல சக்தி வாய்ந்த நபரா இருக்கர அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்புக்கும் உலக பணக்காரரான எலான் மஸ்குக்கும் நடுவுல இப்ப நடக்குர கருத்து வேற்பாடு, உரசல்கள் இதெல்லாம் இப்ப பரஸ்பர வார்த்தை போரா உருவாகிருக்கு. இது தான் இப்ப சர்வதேச அளவுல ஹாட் டாபிக்கா வலம் வருது.

ட்ரம்புக்கும் மஸ்குக்கும் இடையில இருந்த நட்பு பத்தி தெரியாதவங்க யாருமே இருக்க மாட்டாக்க. எந்த அளவுக்கு ஆழமான நட்புன்னு கேட்டா, இரண்டாவது முறை அமெரிக்க அதிபரா ட்ரம்ப் பதவியேத்ததும் DOGE(Department of Government Efficiency) அதாவது செயல்திறன் மேம்பாட்டு துறைனு ஒரு தனி துறையே துவங்கி அதுக்கு தலைவரா எலான் மஸ்க்க நியமிச்சாரு ட்ரம்ப். பிற நாட்டு தலைவர்களோட நடக்கர முக்கிய உரையாடல்களையும் மஸ்க் கட்டாயம் இடம்பிடிப்பாரு. அதனால இவங்களுக்கு இடையிலான நட்பு நிச்சயம் அமெரிக்க பொருளாதாரத்துல பெரிய அளாவுல மாற்றத்த கொண்டு வரும்னு எதிர்பார்க்கப்பட்டுச்சு. ஆனா இப்ப அதுக்கான வாய்ப்புகள் மிக மிக குறைவுன்னு தான் சொல்லப்படுது.

இந்த பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளி எங்கன்னு பார்த்தா, கடந்த சில நாட்களுக்கு முன்னாடி ட்ரம்ப் தலைமையிலான அரசு, One Big Beautiful Bill நு சொல்லப்படர புதிய வரி குறைப்பு மசோதாவ செனட் சபையில தாக்கல் செஞ்சாங்க. இதுல தான் ஆரம்பிச்சது பிரச்சனை. அமெரிக்க பொருளாதாரத்த அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் வல்லமை கொண்ட இந்த மசோதாவ எல்லாரும் ஆதரிக்கனும்னு ட்ரம்ப் ஒரு பக்கம் வலியுறுதிட்டு இருக்க, மற்றொரு பக்கம், இது ஒரு முட்டாள்தனமான மசோதான்னும் இதுனால நாட்டோட செலவு தான் அதிகரிக்கும்னும் அதிரடி விமர்சனத்த முனெச்சாரு மஸ்க். அதுமட்டும் இல்லாம செயல்திறன் மேம்பாட்டு துறைன்னு ஒன்னு உருவாக்கி செலவுகள கட்டுப்படுத்தனும்னு என்ன சொல்லிட்டு இப்ப அமெரிக்க நிதியாளாரான ஜெஃப்ரி எப்ச்டீனோட ஆலோசனையில இந்த மசோதாவ தாக்கம் செஞ்சது சரி கிடையாதுன்னும் சொன்னாரு மஸ்க்.

இதுக்கு பதில் கொடுத்த ட்ரம்ப், இந்த மசோதா பத்துன தகவல முழுசா தெரிஞ்ச மஸ்க் இப்படி சொல்ரது ரொம்ப அதிர்ச்சியளிக்கிதுன்னு சொல்ல, அதுக்கு மஸ்க்கோ, எனக்கு இந்த மசோதாவ ஒரு முறை கூட க்கட்டுனது கிடையாதுன்னு அதிரடி கிளப்புனாரு. அதுமட்டும் இல்லாம தான் இல்லன்ன ட்ரம்ப் இந்த தேர்தல்ல ஜெயிச்சு அதிபர் ஆகிருக்க முடியாதுன்னும் சொல்ல, கோபமடைஞ்ச ட்ரம்ப் எங்க ரெண்டு பேருக்கு நடுவுல நல்ல நட்பு இருந்தது இனியும் அது தொடர்மான்னு தெரியலன்னும் மஸ்க் தனக்கு எதிரா இருக்கரத பெருசா பொருட்படுத்தல்லுன்னும் ஆனா அத அவரு முன்னாடியே செஞ்சிருக்கனும்னும் செய்தியாளர் சந்திப்புல காட்டமா தெரிவிச்சாரு.

ட்ரம்போட இந்த பேட்டி நேரலையில ஓளிபரப்பாச்சு. இதுக்கு தன்னோட எக்ஸ் தளத்துல பதிலடி கொடுத்தாரு மஸ்க். அதுல தன்னோட நிறுவனங்களோட அரசு ஒப்பந்தத்த ட்ரம்ப் ரத்து செய்யரத பத்தி பதிவிட்டிருந்தாரு. குறிப்பா, ட்ரம்ப்ப அதிபர் பதவியில இருந்து நீக்கிட்டு துணை அதிபரான ஜே.டி.வான்ச அதிபரா நியமிக்கனும்னு பயனர் ஒருத்தர் போட்ட பதிவ ஹைலைட் பன்ணி அமான்னு சொல்லி ஆமோதிச்சாரு மஸ்க். அதுமட்டும் இல்லாம அமெரிக்கால புது கட்சிய உருவாக்கனுமாங்கர்து பத்தி எக்ஸ் தளத்துல ஒரு வாக்கெடுப்பயும் முன்னெடுத்துருக்காரு மஸ்க்.

சரி இப்ப மிகப்பெரிய கேள்வியே அடுத்து என்ன நடக்கும்க்கரது தான்? மஸ்க்கோட தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு மத்தியில அமெரிக்க நாடாளுமன்றத்துல ட்ரம்போட மசோதாவுக்கு ஆதரவு கிடைக்குமான்னும் பார்க்க வேண்டிருக்கு. காரணம், அந்த மசோதாவ எதிர்க்கரவங்களுக்கு வாய்மொழியா மட்டும் இல்லாம நிதி பாதுகாப்பையுமே மஸ்க்கால வழங்க முடியும். இன்னொரு

பக்கம் மஸ்க் நிறுவனங்களோட அரசு ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவேன்னும் எச்சரிச்சிருக்கர ட்ரம்ப், பைடன் அதிபரா இருந்தப்ப மஸ்க் நிறுவனங்களோட பரிவர்த்தனைகள் பத்தி விசாரணையும் முன்னெடுக்கலாம்னும் அதுக்கான வாய்ப்புகளும் இருக்கரதா வல்லுநர்கள் தெரிவிக்கராங்க.

ட்ரம்ப்போட திபர் பதவி இன்னும் முன்றரை வருஷங்கள் தான் ஆனா எனக்கு இன்னும் 40 வருஷங்களுக்கு மேல இருக்குன்னு மஸ்க் எக்ச் தளத்துல பதிவிட்டிருகாரு. இந்த பதிவ வெச்சு பார்த்தா இவங்க இரண்டு பேருக்குள்ள இருக்கர பிரச்சினை விரைவில முடிய வாய்ப்பு குறைவுக்குன்னும் இந்த கூச்சல் குழப்பம் அடங்காத வரைக்கும் அமெரிக்க அரசியல்ல இருக்கர மற்ற பிரச்சனைகள் எல்லாமே இருட்டடிப்பு செய்யப்பட வாய்ப்பிருப்பதாவும் சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கராங்க.


Next Story

மேலும் செய்திகள்