``இஸ்ரேலுடன் உறவு கொண்டாடினால் இதான் கதி’’ - ஹவுதிக்கள் பேயாட்டம்
செங்கடல் வழியாக இஸ்ரேலுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் கப்பல்களை அனுமதிக்க மாட்டோம் என ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழுத் தலைவர் அப்துல் மாலிக் அல் ஹவுதி Abdul-Malik al-Houthi அறிவித்துள்ளார்.
செங்கடல் வழியாக செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு,, கிரீஸைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான சரக்குக் கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெடி வைத்து தகர்த்து கடலில் மூழ்கடித்தனர். இந்நிலையில், செங்கடல் வழியாக இஸ்ரேலுக்கு சரக்குக் கப்பல்கள் செல்லக் கூடாது என்றும் மீறினால் தாக்குதல் தொடரும் என்றும் ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story
