Iran War| Trump| ஈரான் போரில் அதிர்ச்சி திருப்பம்.. உலக நாடுகளை படபடப்பிலேயே வைத்திருக்கும் டிரம்ப்

ஈரான் போரில் அதிர்ச்சி திருப்பம்.. உலக நாடுகளை படபடப்பிலேயே வைத்திருக்கும் டிரம்ப்

#iranwar #trump 80 நிமிடங்கள் மட்டுமே நடந்த ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் அமெரிக்க - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை, 80 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது... மேற்கு ஆசியப் பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் மத்தியஸ்தத்துடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், இருதரப்பும் தங்களுக்குள் ஆலோசிக்க வேண்டும் எனக் கூறி, தொடங்கிய 80 நிமிடங்களிலேயே இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். லெபனானில் உள்ள தங்களின் ஆதரவுப் படைகளை ஈரான் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தவறினால் கடந்த வாரத்தை விட மிகக் கொடூரமான தாக்குதலை ஈரான் சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதன் எதிரொலியாகவே பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com