Artemis II | விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்த வீடியோ.. உலகே எதிர்பார்த்த அந்த நொடி

விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்த வீடியோ.. உலகே எதிர்பார்த்த அந்த நொடி

விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்த வீடியோ.. உலகே எதிர்பார்த்த அந்த நொடி #ArtemisII #viralvideo #space #thanthitv நிலவை நோக்கிய மனிதனின் அடுத்தகட்டப் பயணமான நாசாவின் 'ஆர்ட்டெமிஸ் 2' விண்கலத்தில் இருந்து, விண்வெளி வீரர்கள் பூமியுடன் கலந்துரையாடினர். விண்கலத்தை நிலவின் சுற்றுப்பாதைக்குத் தள்ளும் முக்கிய நிகழ்வு வெற்றிகரமாக முடிந்த நிலையில், தங்களது அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். பூமியை விண்வெளியில் இருந்து காண்பது மெய்சிலிர்க்க வைத்தது என விண்கலத்தின் தளபதி ரீட் வைஸ்மேன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். விண்கலக் கழிவறையில் ஏற்பட்ட ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறைச் சரி செய்த விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், நகைச்சுவையாகத் தன்னை ஒரு "விண்வெளி Plumber" என்று கூறிக்கொண்டார். முதல்முறையாக விண்வெளிக்குச் சென்றுள்ள கனடா நாட்டு வீரர் ஜெரமி ஹான்சன், தான் ஒரு சிறு குழந்தையைப் போல உணர்வதாகத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com