Isreal Iran War | "நேரம் வந்து விட்டது.." - ஈரான் எடுத்த முடிவு?

"நேரம் வந்து விட்டது.." - ஈரான் எடுத்த முடிவு?

அணு ஆயுத பரவாமை ஒப்பந்தமான NPT-யில் இருந்து விலக ஈரான் திட்டம்? #isrealiranwar #iranattack #isrealattack #isrealiranwar #USIsraelWaronIran #thanthitv “அணு ஆயுதங்களை உருவாக்கும் எண்ணம் ஈரானுக்கு இல்லை“ அணு ஆயுத பரவாமை ஒப்பந்தமான NPT-யில் இருந்து ஈரான் விலக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை குழு செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரெஸாயி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களில் இருந்து ஈரானின் அணு நிலையங்களை இந்த ஒப்பந்தம் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும், இதில் தொடர்வதில் பயன் இல்லை என்றும் அவர் கூறினார். அதேசமயம், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் எண்ணம் இல்லையெனவும் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்நிலையில், இஸ்ரேல் 2 ஈரான் அணு சக்தி நிலையங்களை தாக்கியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதால், சர்வதேச அணுசக்தி முகமை அமைதி மற்றும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளது. அணு ஆயுத பரவாமை ஒப்பந்தமான NPT-யில் இருந்து விலக ஈரான் திட்டம்?

X

Thanthi TV
www.thanthitv.com