20 ஆண்டுகளாக தலிபான்கள் மாறவில்லை - முன்னாள் இந்திய விமானி தகவல்

20 ஆண்டுகளாக தலிபான்கள் மாறவில்லை - முன்னாள் இந்திய விமானி தகவல்
20 ஆண்டுகளாக தலிபான்கள் மாறவில்லை - முன்னாள் இந்திய விமானி தகவல்
Published on

20 ஆண்டுகளாக தலிபான்கள் மாறவில்லை - முன்னாள் இந்திய விமானி தகவல்

20 ஆண்டுக்கு முன் இருந்த தலிபான்களுக்கும், தற்போது உள்ள தலிபான்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என்று முன்னாள் இந்திய விமானியான கேப்டன் தேவி ஷரன் கூறியுள்ளார்.ஆப்கானிஸ்தான் தலிபான் கட்டுப்பாட்டில் வந்த நிலையில், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வீதிகளில் ஆயுதம் ஏந்தி வலம் வரும் தலிபான்களால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் 20 ஆண்டுக்கு முன் இருந்த தலிபான்களுக்கும், தற்போது உள்ளவர்களுக்கும் எந்த மாற்றமும் இல்லை என்றதுடன், கல்வியில் மட்டுமே அவர்கள் சிறிது முன்னேறியுள்ளனர் என முன்னாள் இந்திய விமானி கேப்டன் தேவி ஷரன் கூறியுள்ளார்.கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி கேப்டன் தேவி ஷரன் இயக்கி சென்ற இந்தியன் ஏர்-லைன்ஸ் ஐசி-814 விமானத்தை கடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள், அதனை ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்தில் தரையிறக்கினர். அந்த கசப்பான சம்பவத்தை நினைவு கூர்ந்த விமானி, காபூலில் தற்பொழுது ஆயுதமேந்தி வாகனங்களில் வலம் வருவது போல தான், விமானம் கடத்தப்பட்ட அந்த தருணத்திலும் தலிபான்கள் வலம் வந்தனர் என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com