ஓயாத மரண ஓலம்... காஸா எங்கும் சடல குவியல்... கதறும் பாலஸ்தீனர்கள்
காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் தொடரும் நிலையில், கடந்த 6 வாரங்களில் மட்டும் 798 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நீடிக்கிறது. இந்நிலையில், தெற்கு இஸ்ரேல் பகுதியில் இருந்து காசாவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி முதல் சுமார் 5 மணி வரை தாக்குதல் நீடித்தது. தொடர் வெடிச்சத்தம் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இதனிடையே, கடந்த ஆறு வாரங்களில் குறைந்தது 798 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணைய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
