"விஞ்ஞான வளர்ச்சியின் உச்சம்.." அமெரிக்காவிலிருந்து Minister Ma.subramanian வெளியிட்ட வீடியோ
அமெரிக்கா சென்றுள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியன் தானியங்கி காரில் ஏறி பயணம் செய்தது குறித்த வீடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள மனநல மருத்துவ சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அங்கு தானியங்கி காரில் பயணம் செய்த அனுபவத்தை குறிப்பிட்டுள்ளார். Human Brain செயல்படுவதைப் போன்ற Sensors உதவியுடன், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் நூற்றுக்கணக்கான கார்கள் ஓட்டுனர்கள் இல்லாமலேயே இயக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். விஞ்ஞான வளர்ச்சியின் உச்சமான இந்த ‘Waymo’ கார்களின் செயல்பாடு மிகவும் பிரமிப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story
