இஸ்ரோவும் நாசாவும் சேர்ந்து செய்யும் சம்பவம்.. இன்று விண்ணில் பாயும் 'நிசார்'

x

இன்று மாலை விண்ணில் பாய்கிறது, 'நிசார்' செயற்கைக்கோள்

சுமார் பனிரெண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து தயாரித்த நிசார் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி-எப்16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து மாலை 5.40 மணிக்கு 'நிசார்' செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான கவுண்டவுன் நேற்று மதியம் தொடங்கியது. இந்த செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒரு முறை பூமி குறித்த விரிவான மற்றும் தெளிவான பல தரவுகளை கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தரவுகள் இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை காக்கவும், விவசாயிகளுக்கும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்