Gold Toilet | America | தங்கம் விக்குற விலைக்கு உலகையே திரும்பி பார்க்க விட்ட `தங்க டாய்லெட்'

ஒரு டாய்லட்டிற்கு 106 கோடி ரூபாய் விலை சொன்னால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?... ஆனால் 106 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ள இந்த தங்க கழிவறை கோப்பையை பற்றிதான் இணையவாசிகள் பரபரப்பாக பேசி வருகின்றனர்... அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கத்தாலான கழிவறை கோப்பை 106 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது... இத்தாலிய கலைஞர் மௌரிசியோ கேட்டலன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த கழிவறை கோப்பை, 18 கேரட் தங்கத்தாலான 101 கிலோ எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது...

X

Thanthi TV
www.thanthitv.com