Israel Iran War | ஈரான் கையில் எடுத்த ``அழிவின் ராட்சசன்''.. கதறும் இஸ்ரேல் - கைமீறிய நிலை
Israel Iran War | ஈரான் கையில் எடுத்த ``அழிவின் ராட்சசன்''.. கதறும் இஸ்ரேல் - கைமீறிய நிலை
கொத்து குண்டுகளை ஏந்திய ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் 8வது நாளை எட்டியுள்ள நிலையில், இருதரப்பும் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய இஸ்ரேலில் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதியில், கொத்து குண்டுகளை ஏந்திய ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் வீசிய ஏவுகணைகளில் ஒன்றில் அதிக வெடிமருந்துடன் கூடிய கொத்து குண்டுகள் இருந்ததாக கூறியுள்ளது. இதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
Next Story
