உலகை உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்... நாளையோடு ஓராண்டு நிறைவு

ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த ஆண்டு, போலீசாரால் கைது செய்யப்பட்ட போது உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியது.
உலகை உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்... நாளையோடு ஓராண்டு நிறைவு
Published on

உலகை உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்... நாளையோடு ஓராண்டு நிறைவு

ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த ஆண்டு, போலீசாரால் கைது செய்யப்பட்ட போது உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியது. இந்நிலையில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்து நாளையோடு ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில், அவர் நினைவாக பேரணி நடத்தப்பட்டது. ஜார்ஜ் ஃப்ளாய்டின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும், இதே போல காவல்துறையினரின் வன்முறைப் போக்கால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜார்ஜ் ஃப்ளாய்டின் சகோதரி, தனது சகோதரரின் இறப்பு, தங்கள் குடும்பத்திற்கு பேரிழப்பு என்றும், தாங்க முடியா மன அழுத்தத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தப் பேரணியில் ஏராளமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com