பதவியேற்கும் முன்னே உலகமே எதிர்பார்த்த...டிரம்ப் கொடுத்த முக்கிய வாக்குறுதி

x

மூன்றாம் உலகப்போர் நடக்காமல் தடுப்பேன் என, டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை டிரம்ப் இன்று பதவியேற்கிறார். வாஷிங்டன் டி.சி.யில் நடந்த பதவியேற்புக்கு முந்தைய வெற்றி பேரணியில் 'புத்தம் புதிய நாள்' என்று டிரம்ப் பேசினார். மேலும், உக்ரைனில் போரை முடிப்பேன் என்றும், மத்திய கிழக்கில் குழப்பத்தை நிறுத்துவேன் எனவும் தெரிவித்த அவர், 3ம் உலகப் போர் நடக்காமல் தடுப்பேன் என்று உறுதி அளித்தார். தொடர்ந்து எலான் மஸ்க் பேச வந்த போது, அவரது மகனும் மேடைக்கு வந்ததால், மக்கள் ஆரவாரம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்