ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு - 8மணி நேரத்துக்குள் அதிரடி காட்டிய FBI

ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்? என அடையாளம் காணப்பட்டுள்ளது... துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என FBI உறுதிப்படுத்தியுள்ளது... படுகொலை என்பதை உறுதி செய்த FBI அதற்கான காரணத்தைக் கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகிறது... டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் 120 முதல் 150 மீட்டர் தொலைவிலிருந்து துப்பாக்கியால் சுட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது...

எந்த சூழ்நிலையிலும் தேர்தலில் இருந்து பின் வாங்கப்போவதில்லை என்று, ஆதரவாளர்களுக்கு டொனால்ட் டிரம்ப், அறிக்கை மூலம் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com