துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் - 55,000 பேர் பலி டூ பிரிட்டனில் பெண்களுக்கு வாக்குரிமை : வரலாற்றில் இன்று
1918
பிரிட்டனில் 30+ வயது பெண்களுக்கு வாக்குரிமை
பிரிட்டனில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்ற நாள் இன்று. அப்போது, 85 லட்சம் பெண்கள் வாக்குரிமையை பெற்றனர். அப்போது 21 வயதுக்கு உட்பட்ட குடிமக்களும், ராணுவத்தில் உள்ளவர்கள் 19 வயதிலும் வாக்குரிமை பெற்றிருந்தனர். 1928ஆம் ஆண்டு சம உரிமைச் சட்டம் வரும் வரை, 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே வாக்குரிமை கிடைத்தது.
1952
இங்கிலாந்து ராணியாக அரியணை ஏறிய இரண்டாம் எலிசபெத்
இங்கிலாந்து மன்னர் நான்காம் ஜார்ஜ் உடல்நலக்குறைவால் இதே நாளில் உயிரிழந்தார். அப்போது, கென்யாவுக்கு வில்லியமுடன் சுற்றுலா சென்றிருந்த 27 வயதான இளவரசி இரண்டாம் எலிசபெத், உடனடியாக இங்கிலாந்து திரும்பி ராணியாக அரியணை ஏறினார். அனைத்து அரச பொறுப்புகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு, ராணி என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டது. அவரது முடிசூட்டு விழா 15 மாதங்கள் கழித்து 1952 ஜூன் 2ஆம் தேதி உலகமே பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
1959
இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி
இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதியாக, அன்னா சாண்டி (Anna Chandy) நியமிக்கப்பட்டார். அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்டார். முதல் தலைமுறை பெண்ணியவாதி என்று அழைக்கப்பட்ட அண்ணா சாண்டி, 1937 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே மாவட்ட நீதிபதியாகவும் இருந்துள்ளார். மேலும், 1959ஆம் ஆண்டில் உயர்நீதிமன்ற நீதிபதி என்ற உச்சபட்ச பதவிக்கு வந்த இரண்டாவது பெண் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராவார்.
1987
ஆஸ்திரேலியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி
ஆஸ்திரேலியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதியாக மேரி காட்ரன் (Mary Godran ) நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 44.
2023
துருக்கி, சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 55,000+ பேர் பலி
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
