17 நாட்களுக்கு பிறகு தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்களின் முதல் வீடியோ

தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
17 நாட்களுக்கு பிறகு தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்களின் முதல் வீடியோ
Published on

தாய்லாந்தில் உள்ள தாம்லாங் குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் முதல் வீடியோ பதிவு நேற்று மாலை வெளியிடப்பட்டது. சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறும் அவர்கள் அனைவரும் சராசரியாக 2 கிலோ எடை வரை குறைந்துள்ளதாகவும், 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முழுமையாக அவர்கள் பழைய நிலைமைக்கு திரும்ப ஒரு மாதமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே, மிகவும் அபாயகரமான மீட்பு பணியின் வெற்றிக்கு சர்வதேச அளவிலான ஒற்றுமையே காரணம் என தாய்லாந்து அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com